PIXALIVE APP-ACHIEVEMENT OF TAMILAN
உலகின் பிரபல சமூக
வலைதளங்கள் பெரும்பாலும் வெளிநாட்டவரால் உருவாக்கப்
பட்டுள்ள நிலையில், தமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைதளமாக PIXALIVE
இருக்கிறது.
இணையத்தில் சமூக வலைதளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது Facebook,
Twitter தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால்
நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைதளங்கள் பலவும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன.
அந்த வகையில் சமூக வலைதள சேவையில் புது அம்சங்களுடன் களம் இறங்கியிருக்கும் புதுவரவாக Pixalive இருக்கிறது. தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த விவசாயியின் மகனான ராஜசேகர் சுந்தரேசன் (Engineer)முயற்சியில்
Pixalive என்ற app உருவாகி
உள்ளது.
Pixalive சமூக வலைதளம் இந்தியாவில் உருவாகி இருக்கும் அழகிய, வண்ணமயமான மற்றும் புதுவித அம்சங்கள் நிறைந்த சேவையாக இருக்கிறது. Text,Video,
Audio,Photos உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடியும். செயலியில் Trending Video,County,People,Voice,Photos
Audio,Photos உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடியும். செயலியில் Trending Video,County,People,Voice,Photos
உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.
உலகில் Voice Note பதிவு செய்யும் வசதி கொண்ட முதல் சமூக வலைதளமாக Pixalive இருக்கிறது. வழக்கமாக சமூக வலைதளங்களில் Photos,Videos உள்ளிட்டவற்றுடன் Text பதிவிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், Pixalive செயலியில் புகைப்படம், வீடியோவுடன் Voice Note சேர்க்கலாம்.
Pixalive செயலியில் User பதிவிடும் Post அனைத்தும் ஏழு நாட்களில் மறைந்துவிடும். செயலியில் வழங்கப்பட இருக்கும் புது Update மூலம் போஸ்ட்கள் பயனர் விரும்பும் வரை செயலியில் இருக்கச் செய்யலாம். தற்சமயம் சில புது வசதிகளை வழங்கும் Pixalive செயலியில் விரைவில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட உள்ளது.
Pixalive வழங்கி இருக்கும் அம்சங்கள் வெறும் Teaser மட்டும் தான், விரைவில் இந்த செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படும் என Pixalive நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜசேகர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
Pixalive வழங்கி இருக்கும் அம்சங்கள் வெறும் Teaser மட்டும் தான், விரைவில் இந்த செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படும் என Pixalive நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜசேகர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.
Pixalive செயலி தற்சமயம் Android OS-ல் மட்டும் கிடைக்கும் நிலையில் விரைவில் IOS மற்றும் Desktop பதிப்புகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PIXALIVE MOBILE APP LAUNCHING VIDEO
LINK TO DOWNLOAD
gud info.....!!!!!! keep on going.......
ReplyDelete